2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

அன்பே வா தொடரில் பூமி என்கிற கதாபாத்தித்தில் நடித்து பிரபலமானவர் டெல்னா டேவிஸ். ஆனால், திடீரென அந்த தொடரை விட்டு அவர் விலகிய நிலையில் கண்மணி என்கிற கேரக்டரை ஹீரோயினாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து டெல்னா டேவிஸ் ரசிகர்கள் அவரிடம் மீண்டும் அன்பே வா தொடரில் நடிக்க வர சொல்லி கேட்க, அவர் தற்போது வேறொரு சீரியலில் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கவுள்ளார். சரிகம நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தொடரில் டெல்னா டேவிஸ், விஜய் டிவி மெளன ராகம் 2 புகழ் சல்மான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடரின் ஷூட்டிங்கானது அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.