ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை ஸ்ரத்தா தாஸ் இருவரும் மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் பயணித்தனர். கிளம்பி அரை மணி நேரம் ஆன நிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பற்றி ராஷ்மிகா கூறும்போது, ‛‛சாவில் இருந்து தப்பித்தோம்'' என்று விவரித்து இருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவுடன் கன்னடத்தில் பொகரு என்கிற படத்தில் நாயகனாக நடித்தவரும், மறைந்த நடிகர் சிரஞ்சீவி ஷார்ஜாவின் தம்பியுமான துருவ சார்ஜாவும் இதேபோன்று நேற்று முன் தினம் மேற்கொண்ட விமான பயணத்தில் சாவில் இருந்து மீண்டு வந்த தனது அனுபவத்தை திகிலுடன் விவரித்துள்ளார்.
துருவ சார்ஜா தற்போது நடித்து வரும் மார்ட்டின் படத்தின் படப்பிடிப்பிற்காக டில்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மழை காரணமாக ஆட்டம் கண்டது. இருந்தாலும் விமானியின் சாதுரியமான நடவடிக்கையால் ஒரு வழியாக பத்திரமாக ஸ்ரீநகரில் விமானம் தரை இறங்கியது.
இதுகுறித்து துருவ சார்ஜா விமானத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டு, “சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்து வந்துள்ளோம். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தங்களது கடவுள்களை உரக்க அழைத்தபடி பிரார்த்தனை செய்தது மனதை உருக்குவதாக இருந்தது. இருந்தாலும் கடவுளின் தூதராக வந்தது போன்று விமானி எங்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டார். அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.