செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சில ரசிகர்கள் அண்மையில் லைவ்வில் வந்த பிரியங்காவிடம் நீங்கள் இப்போது சிங்கிளா? என்று கேள்வி கேட்க, அதற்கு பிரியங்கா ஆமாம் என்று கூறி தனது கணவரை பிரிந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ராகுல் வர்மாவை திருமணம் செய்த பிரியங்கா, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்துள்ளார்.