நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு அண்மையில் நடந்து முடிந்தது. இதில், முன்னதாக பொறுப்பிலிருந்த ரவி வர்மா மற்றும் அவரது குழுவிலிருந்த உறுப்பினர்கள் பணமோசடி செய்துவிட்டதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ரவிவர்மா மீது நடிகை ஒருவர் மற்றொரு புகாரை கொடுத்துள்ளார்.
அதாவது ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அந்த நடிகை அவரிடம் வாய்ப்பு கேட்டு அணுகியதாகவும் அதற்கு ரவிவர்மா தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று சர்ச்சைக்குரிய வகையில் அந்த நடிகையிடம் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பொதுக்குழுவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிதி மோசடியோடு சேர்த்து ரவிவர்மா மீதான இந்த புகார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.