ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் 9, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அண்மையில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 கிராண்ட் பினாலே' நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதன் ஏற்பாடுகளை பார்க்க முன்னதாகவே வந்த பிரியங்கா லைவ் வீடியோவில் வந்து ஸ்டேடியத்தை சுற்றிக்காட்டினார்.
அப்போது, தான் மிகவும் நல்ல பொண்ணு என்றும் விஜய் டிவிக்காக கடுமையாக உழைத்தும் சம்பளத்தை உயர்த்தி தராமல் இருக்கிறார்கள் என்றும், தனது ஆதங்கத்தை காமெடியாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.