துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
விஜய் டிவியில் வெளியாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தனது காதலி பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புகழ். அதையடுத்து தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று புகழ் - பென்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் புகழ், "இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமென்றால் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள். மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். என் மகளே. தாயும் சேயும் நலம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.