பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா |
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி வெள்ளித்திரையும் சின்னத்திரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‛வானத்தைப் போல' சீரியல் குழுவினர் நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தாருக்கு பலத்தை தரவும் வேண்டி வானத்தைப் போல தொடரின் ஹீரோ ஸ்ரீகுமார் தனது செட்டில் இருக்கும் சக நடிகர்களையும், வேலை செய்பவர்களையும் ஒரு நிமிடம் மவுனம் காக்குமாறும் கேட்டுக்கொள்ள அனைவரும் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.