விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக ஜோதிராய் நடித்து வந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன் அவர் சீரியலிலிருந்து வெளியேறிவிட்டார். சில காலங்களே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட ஜோதிராயை மீண்டும் சீரியலில் நடிக்க சொல்லி பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜோதிராய் சமீப காலங்களில் மாடர்ன் உடையில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து வருகிறார். அந்த புகைப்படங்களில் ஜோதிராயை பார்க்கும் ரசிகர்கள் அவரது இளமையான தோற்றத்தையும் அழகையும் வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.