சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா அண்மையில் வெளியாகி உள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். அவருடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நிஷா, 'ரஜினி சாரை பார்த்ததுமே டயலாக்கை மறந்துட்டேன். அப்புறம் ஒருவழியா உள்வாங்கி சொல்லிட்டேன். ஷாட் முடிந்ததும் ரஜின் சார் என்னை கட்டிப்பிடித்து சூப்பரா பண்ணீங்க. நான் பண்ணிருந்தா 12 டேக் எடுத்திருப்பேன். நீங்க சிங்கிள் டேக்ல பண்ணிட்டீங்க என்று சொன்னார். அந்த அளவுக்கு எளிமையா இருந்தார். அதேபோல் டப்பிங் கரைக்ஸனுக்கு ஸ்டூடியோ போயிருந்தப்போதும் ஒரு டயலாக்கை 35 டேக் பேசினேன். ஏ.சி போயிட்டாருங்கிற அந்த ஒரு டயலாக் சொல்றதுக்குள்ள நெல்சன் சாரே அங்கிருந்து போயிட்டாரு. ஆனா ரஜினி சார் ஒருமணி நேரம் வெயிட் பண்ணி முடிச்சிட்டு தான் போனாரு. மிகவும் பெரிய மனுஷன் அவரு' என ரஜினிகாந்துடனான தனது நெகிழ்ச்சியான தருணங்களை கூறியுள்ளார்.