ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பாடகர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்ற போது அங்கு ஈஸ்வர் சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டியதுடன், என்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளதாக கூறினார். எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியிருக்க உயிர் பயத்தை காட்டும் அளவுக்கு என்னை ஏன் மிரட்டினார் என்று தெரியவில்லை. எனவே, அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.
மேலும், வயதான அம்மாவுடன் தனியாக வசித்து வருவதால் தனக்கு தக்க பாதுகாப்பு வேண்டியும் போலீஸிடம் கிருஷ்ணா வேண்டுகோள் வைத்துள்ளார்.