தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
சின்னத்திரையின் பிரபல ஜோடிகளான ஆல்யா - சஞ்சீவ் இருவரும் வருடத்திற்கு ஒரு கார் என வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு சஞ்சய் - ஆல்யாவுக்கு திருமணம் நடந்தது. இதனையடுத்து காதல் மனைவிக்கு பரிசாக ஒரு பென்ஸ் கார் வாங்கியிருந்தார் சஞ்சீவ். இதனையடுத்து முதல் குழந்தை அய்லா 2020ம் ஆண்டு பிறந்தார். மகள் பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சஞ்சீவ் மற்றொரு சொகுசு காரை வாங்கினார். அதன்பின் மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் போது மூன்றாவதாக கியா கார்னிவல் என்ற காரை வாங்கினர். இன்ஸ்டாகிராமில் ஆல்யாவுக்கு 3 மில்லியன் பாலோயர்கள் ரீச்சானதையடுத்து அதை செலிபிரேட் செய்யும் விதத்தில் மினி கூப்பர் காரை ஆல்யாவுக்கு பரிசளித்தார். அதன்பிறகு ஆல்யா - சஞ்சீவிற்கு இரண்டாவதாக மகன் பிறந்ததையடுத்து மீண்டும் ஒரு சொகுசு ரக காரை வாங்கினார். இப்படியாக 2019 முதல் 2022 வரை வருடத்திற்கு ஒன்று என 4 கார்களை வாங்கியிருந்தனர். இந்நிலையில், 2023ம் ஆண்டிலும் மஹிந்திரா கம்பெனியின் தார் ரக காரை சஞ்சீவுக்கு பிறந்தநாள் பரிசாக ஆல்யா வாங்கி கொடுத்துள்ளார். ஆக மொத்தம் திருமணமானது முதல் இப்போது வரை 5 முறை சஞ்சீவ்- ஆல்யா தம்பதியினர் கார் வாங்கியுள்ளனர்.