'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சீரியல் நடிகர்களான ராஜ்கமல் - லதா ராவ் தம்பதியினர் தங்களது சொந்த உழைப்பில் மதுரவாயலில் அருமையான பங்களா ஒன்றை கட்டியிருந்தனர். அந்த பங்களாவை சீரியல் மட்டும் விளம்பர பட ஷூட்டிங்கிற்கு வாடகையும் விட்டு வந்தனர். இந்நிலையில், அந்த பங்களாவின் பின் பக்கம் கதவின் பூட்டை உடைத்து சில கொள்ளையர்கள் டிவி, மோட்டார் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே தெருவில் இருக்கும் பாஜக பிரமுகரின் வீட்டின் முன் நின்ற காரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பிரபலங்கள் குடியிருக்கும் முக்கியமான ஏரியாவில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ராஜ்கமல் போலீஸில் அளித்த புகாரின் பெயரில் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் திவீர விசாரனை நடத்தி வருகின்றனர்.