தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
சின்னத்திரையின் முக்கியமான நடிகர் ராஜ்கமல். ஆனந்தம், செல்வி, வசந்தம், கல்யாணம், அபியும் நானும் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது ஆனந்த ராகம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இடையிடையே திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடிக்கிறார்.
முதன் முறையாக அவர் கதையின் நாயகனாக அதுவும் பள்ளி மாணவனாக 'ஸ்கூல் கேம்பஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை கணிசமாக குறைத்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கமலுடன் நாகேஷ் பேரன் கஜேசும் பள்ளி மாணவனாக நடித்துள்ளார். டெல்லி கணேஷ், மதன்பாப் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ராமநாராயணா என்பவர் இயக்கி, நடித்துள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது முழுக்க முழுக்க பள்ளி கூடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரே மொழி ஒரே கல்வி என்பது என் கனவு, தற்போது ஒரு பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர், ஒரே படிப்பு. மதிப்பெண் மட்டும் மாணவர் மாணவருக்கு ஏன் மாறுபடுகிறது, இதில் அனைவருக்கும் ஒரே சமச்சீரான கல்வி, அனைவருக்கும் ஏற்ற, தாழ்வு இல்லாத தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.