'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவுடன் 9வது சீசனையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிபோட்டியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார். அருணா, பூஜா, அபிஜித், பிரசன்னா மற்றும் பிரியா ஜெர்சன் என 5 பேர் இறுதிபோட்டியில் கலந்து கொண்டனர். இதில், மக்கள் மற்றும் நடுவர்களின் வாக்குகள் அடிப்படையில் அருணா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் சீசன் 9க்கான டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்லும் அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ. 10 லட்சம் பணம் வழங்கப்பட்டது.
அதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்த பிரியா ஜெர்சனுக்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடத்தை பிடித்த பிரசன்னாவுக்கு ரூ. 5 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற நபர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டாப் 3ல் கூட இல்லையா? சோகத்தில் பூஜா ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் 9 இறுதிப்போட்டியில் அருணா, பிரியா ஜெர்சன் மற்றும் பிரசன்னா ஆகியோர் டாப் 3 இடத்தை பிடித்து பரிசு பெற்றுள்ளனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதலே நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூஜா தான். இறுதிபோட்டியில பூஜா தான் அதிக வாக்குகளுடன் டைட்டில் பட்டம் வெல்வார் என்று அவரது ரசிகர்களும் நம்பி வந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் டாப் 3 இடத்தை கூட பிடிக்கவில்லை. இதன்காரணமாக பூஜாவின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.