கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், முதன்மை கதாபாத்திரமான மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் கதையின் போக்கு தனக்கு பிடிக்காத காரணத்தால் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து யார் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், மீனாட்சி தீ விபத்தில் இறந்துவிட்டது போல அவரது அஸ்தியை காண்பித்து அந்த கதாபாத்திரத்தை எண்ட் கார்டு போட்டு முடித்திருந்தனர். இதனால் மீனாட்சி கதாபாத்திரத்திற்கே எண்ட் கார்டா? என ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மாற்றாக மற்றொரு நடிகையை கண்டுபிடித்துவிட்ட சீரியல் குழு மீனாட்சி கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் நடிகை ஸ்ரீ ரஞ்சனி தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் புதிய மீனாட்சியை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.