ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் |
முன்னணி நடிகையான தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛மாரி' தொடரில் முத்து பேச்சி என்ற கதாபாத்திரத்தில் கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார். மாரி சீரியலில் நடிக்கும் அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 'கோலங்கள் சீரியலில் பணிபுரிந்தவர் தான் மாரி சீரியலின் இயக்குநர். கதை சொல்லும்போதே நான் வியந்துவிட்டேன். அதிலும் முத்து பேச்சி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக்கொண்டேன். முத்து பேச்சி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மேலும் உந்துகோலாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.