காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் காதலித்து திருமணம் செய்த வேகத்திலேயே பிரிந்துவிட்டார்கள். தங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்து பொதுவெளியில் மாறி மாறி பேசி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் இவர்களின் சண்டை தற்போது அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லி அனுதாபம் தேடும் நிலைக்கு சென்றுவிட்டது.
அதில் உச்சபட்சமாக ப்ரீயட்ஸ் டைமில் கூட விஷ்ணுகாந்த் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், 24 மணி நேரமும் ரொமான்ஸ் செய்வதிலேயே குறியாக இருப்பார் என்றும் சம்யுக்தா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு விஷ்ணுகாந்தும் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பான மக்கள் அனுதாபத்தை பெறுவதற்காக தனிப்பட்ட அந்தரங்கத்தை பொதுவெளியில் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.