ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' |
தமிழ் திரையுலகில் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ருதி ராஜ். தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் சில படங்களில் நடித்தார். அதன்பின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். 40 வயதாகியும் இளமை ததும்பும் அழகுடன் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ருதி ராஜ் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து அடிக்கடி பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தற்போது பதிலளித்துள்ள அவர், 'திருமணம் குறித்து இதுவரை எதையும் யோசிக்கவில்லை. எனது திருமணம் பற்றி என் பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.
இதேபோல் 44 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த லாவண்யா தேவி கடந்த மார்ச் மாதம் தொழிலதிபரை திருமணம் முடித்தார். அதுபோல் ஸ்ருதி ராஜும் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.