‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே கிழக்கு வாசல் தொடர் உருவாகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி, சஞ்சீவ் வெங்கட், அருண்குமார் ராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்க கமிட்டாகியிருந்தனர். நடிகர் சஞ்சீவ் வெங்க்ட தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். சீரியலுக்கான ஷூட்டிங்கும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'நான் கிழக்கு வாசல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக விலகிவிட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு வாசல் தொடரில் முத்து கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராதிகா சரத்குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை மிஸ் செய்கிறேன். அடுத்த ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் நன்றி' என்று அறிவித்திருந்தார். இதனால், சஞ்சீவின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.