காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ் | பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் |
ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் மற்றும் ரித்திகா செல்வி ஆகியோர் நடிக்கின்றனர். 'அண்ணா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும், நந்தினி தொடருக்கு பின் நித்யா ராம் மீண்டும் தமிழில் நடிக்க வருவதால் அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சீரியலின் ஷூட்டிங்கானது கடந்த 10ம் தேதி, முருகன் கோயில் ஒன்றின் வாசலில் வைத்து பூஜையுடன் தொடங்கியுள்ளது. மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் ஒன்றாக சேர்ந்து க்ளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளனர். 'அண்ணா' சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.