துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த ரியாவை சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு திடீரென நீக்கிவிட்டனர். இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பதிவுகளில் 'இனி நான் சந்தியா இல்லை' என்று அறிவித்திருந்த ரியா, சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும் சில பேட்டிகளில் கூறியிருந்தார். இதனால் ரியா விஸ்வநாத் கேரியர் என்னவாகும்? அவர் தொடர்ந்து நடிப்பாரா? என ரசிகர்கள் ஐயமுற்றனர்.
இந்நிலையில், ரியா விஸ்வநாத் ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் 'சண்டைக்கோழி' தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஒரு சேனல் தன்னை சீரியலை விட்டு நீக்கிய சில நாட்களிலேயே மற்றொரு சேனலின் புது சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி ரியா கெத்து காட்டியுள்ளார். இந்த மகிழ்ச்சியை ரியாவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.