சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், யு-டியூபர் இர்பானை தனது இசையில் பாட வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜிப்ரான், இர்பானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'உங்களை பாட வைத்ததில் மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்களையும் என்னையும் போன்ற அனைத்து பிரியாணி ரசிகர்களுக்காகவும் ஒரு பிரியாணி பாடலை டெடிகேட் செய்வோம்' என்று பதிவிட்டுள்ளார். ஜிப்ரானின் இசையில் இர்பானை குரலை கேட்க இருவரது ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள செய்தியும் பலருக்கு ஆச்சரியத்தை தூண்டியுள்ளது. தற்போது இர்பான், ஜிப்ரானின் எந்த ஆல்பத்தில் பாடியுள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.