சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கடந்த 2006ல் தொடங்கி இதுவரை 8 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழ்நாட்டில் பல புதிய பாடகர்களை அறிமுகம் செய்துவைத்த பெருமையும் இந்நிகழ்ச்சிக்கே சேரும். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 9-க்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் அண்மையில் வெளியான எபிசோடிற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர்.
அப்போது பேசிய சாம் சி.எஸ். 2008ம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் தேர்வில் தான் கலந்து கொண்டதையும் ரிஜக்ட் செய்யப்பட்டதையும் கூறினார். மேலும், 'சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தோல்வியடைந்த ஒருவர் தன்னிடம் வந்து புலம்பும் போது, நீ வெற்றி பெற்றால் பாடகர் ஆகலாம். தோல்வியடைந்தால் என்னை போல் கம்போஸர் ஆகலாம்' என அட்வைஸ் செய்ததையும் அந்த மேடையிலேயே கூறினார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.
சாம் சி.எஸ். போலவே ஆர்.ஜே. பாலாஜியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரிஜக்ட் செய்யப்பட்டவர் தான். ஆர்.ஜே.பாலாஜி இன்று ரேடியோ ஜாக்கி, ஆங்கர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமையுடன் புகழின் உச்சத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.