ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பொதுவாக நடிகைகள் டூர் செல்கிறார்கள் என்றால் காஸ்ட்லியான காரில் நண்பர்களுடன் செல்வார்கள். அல்லது விமானத்தை பிடித்து வெளிநாட்டு சுற்றுதலங்களுக்கு செல்வார்கள். சின்னத்திரை நடிகையான பவித்ரா சென்னையிலிருந்து மதுரைக்கு பஸ்ஸிலும், அதன்பிறகு அங்கிருந்து டிப்பர் லாரியில் லிப்ட் கேட்டும், அங்கிருந்து சதுரகிரிக்கு ஷேர் ஆட்டோவிலும் ஒரு சாமானிய மனிதரை போல் பயணம் செய்துள்ளார். மற்ற நடிகைகள் உல்லாசமாக டூர் சென்று இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுக்கொண்டிருக்க பவித்ரா மட்டும் நண்பர்களுடன் ஒரு தேசாந்திரி போல் அடிக்கடி எளிமையான பயணத்தை செய்து கொண்டிருக்கிறார்.