சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விக்ரம் பிரபு நடித்த படங்களில் முக்கியமானது 60 வயது மாநிறம். இதில் விக்ரம் பிரபுவுடன் பிரகாஷ் ராஜ், இந்துஜா ரவிச்சந்திரன், சமுத்திரக்கனி, பரத் ரெட்டி, இளங்கோ குமரவேல் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மொழி மற்றும் அபியும் நானும் படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இது புகழ்பெற்ற கன்னடத் திரைப்படமான 'கோதி பண்ணா சாதாரண மைகட்டு'வின் தமிழ் ரீமேக். வயது மூப்பின் காரணமாக அல்சைமர் நோயால் (நினைவு மறத்தல்) காணாமல்போன தனது 60 வயது தந்தையை தேடும் ஒரு மகனின் கதை. முதியவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தர வேண்டும் என்று வலியுறுத்துகிற படம். 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நாளை (பிப்.5) மதியம் 1.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.