திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி-2” தொடரில் நடித்தார். லவ் இன்சூரன்ஸ், ட்ரூத் ஆர் டேர் ஆகிய குறும்படங்களிலும் “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி”என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலான “தமாத்துண்டு”எனும் ஆல்பத்தில் நடித்தார். தற்போது சினிமாவிற்கு வந்திருக்கிறார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஒரு தமிழ்ப் பெண். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு திரைத்துறையில் சிறந்த கதாநாயகியாக வலம் வரவேண்டும் என்பதே ஆசை. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்கிறார் அர்ச்சனா.