‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி உட்பட பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். காமெடி நடிகர் என்பதை தாண்டி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நபராக தன் பகுதி சிறுவர்களை தன்னுடைய சொந்த உழைப்பில் கிடைக்கும் பணத்தில் படிக்க வைத்து வருகிறார் பாலா. அவருடைய இந்த நல்ல மனதின் காரணமாக ரசிகர்களும் அவர் மீது மரியாதையும் பாசமும் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாலாவுக்கு ராயல் என்பீல்டு கம்பெனியின் புல்லட் ரக பைக்கை அன்பளிப்பு கிடைத்துள்ளது. அதன் வீடியோவை பகிர்ந்துள்ள பாலா, 'பெட்ரோல் இல்லாம பைக்க தள்ளிட்டு போன எனக்கு இப்ப புல்லட் பைக். இதுதான் நான் ஓட்டுற முதல் புது பைக். இத்தனநாள் செகண்ட் ஹாண்ட் பைக்கு தான் வச்சிருந்தேன்' என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதனைபார்த்துவிட்டு 'நீங்கள் இதையும் விட நல்ல உயரத்திற்கு வருவீர்கள் பாலா. உங்கள் வாழ்க்கையில் இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும்' என பலரும் பாலாவை பாசிட்டிவாக மோட்டிவேட் செய்து வருகின்றனர்.