50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக 86 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கடந்தவார எவிக்சனில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார். 4 முறை கேப்டனாகவும், கேம்களில் சிறப்பாகவும் விளையாடி வந்த மணிகண்டன், இந்த வாரம் நடைபெற்று வரும் 'டிக்கெட் டூ பினாலே' டாஸ்க்கிலும் நிச்சயம் ஜெயித்து பைனல் வரை செல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் பயணம் மறக்க முடியாதது. என்றும் என் நினைவில் இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழு, ஸ்டார் விஜய், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது விலைமதிப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த ரசிகர்களுக்கும் நன்றி. அவர்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்திருக்கிறது. அதிக உயரத்தை அடைய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்' என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டனின் எதிர்காலம் சிறப்பாக அமைய ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.