''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்றாவது சீசனிலிருந்து சமீபத்தில் முடிந்த 6வது சீசன் வரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கி வந்தார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 இம்முறை கடுமையான விமர்சனங்களை பெற்றது. தவிரவும் போட்டியின் நடுவில் ஒரு நல்ல போட்டியாளர் தேவையில்லாமல் எவிக்சன் செய்யப்பட்டதில் நாகார்ஜுனாவுக்கு உடன்பாடு இல்லை. எனவே, அந்த எவிக்சனுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு, சீசன் 7ஐ தொகுத்து வழங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ் பிக்பாஸின் 6வது சீசனும் தேவையற்ற ஆபாசம், அநாவசியமான கருத்துகள் என தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சொல்லப்போனால் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி, பிக்பாஸ் சீசன் 6க்கு சரியான வரவேற்பும் டிஆர்பியும் கிடைக்கவில்லை. எனவே, நாகார்ஜுனாவை போல கமலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகலாம் என சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், கமல் தற்போது இந்தியன் 2 உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வர இருப்பதால் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவது குறித்து இதுவரை கமல்ஹாசன் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுக்கவில்லை. ஒருவேளை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினால் அடுத்த சீசனை சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.