2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
தமிழ் திரையுலகில் கடந்த 63 ஆண்டுகளாக தனது கலைப்பயணத்தை மேற்கொண்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் வெளியாகாத நிலையில் இந்தாண்டு ‛விக்ரம்' என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்து மீண்டும் தனது பழைய பார்முக்கு அதிரடியாக திரும்பியுள்ளார் கமல். அந்தவகையில் வரும் நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதை விஜய் டிவி மிகப்பெரிய அளவில் சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடும் விதமாக உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கமல் நேரடியாக பங்குகொண்டு சிறப்பித்துள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், நடிகை குஷ்பு மற்றும் விக்ரம் படம் புகழ் ஏஜென்ட் டீனா வசந்தி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக திரையுலகில் கமலின் 50வது மற்றும் 60வது வருட கொண்டாட்டத்தை விஜய் டிவி நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.