சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சின்னத்திரை நடிகை திவ்யா, நடிகர் அர்ணவ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. நேற்று சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்த திவ்யா பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‛‛அர்ணவுக்கும் சின்னத்திரை நடிகைக்கும் (அன்ஷிதா) தொடர்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டே தெரிவித்தார். அந்த நடிகை தற்போது அர்ணவ் ஜோடியாக ஒரு தொடரில் நடித்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது கணவர் சின்னத்திரை நடிகை உடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து எனது கணவரிடம் கேட்ட போது முறையாக பதில் கூறிவில்லை. என்னை கேலி செய்யும் வகையில், என் முன்பே அந்த நடிகை போன் செய்து 'ஐ லவ் யூ' அர்ணவ் என்று கூறி முத்தம் கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த நான் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டேன். எங்களது திருமண போட்டோ மற்றும் வீடியோவையும் வெளியிட்டேன். நான் அர்ணவால் கர்ப்பமாக இருக்கிறேன். இதுகுறித்து நான் எந்த விபரங்களும் வெளியிட கூடாது என்று அர்ணவ் மிரட்டி வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகையிடம் இதுகுறித்து கேட்டபோது அந்த நடிகை என் மீது தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்தார். அதோடு இல்லாமல் எனது குழந்தை வயிற்றிலேயே செத்து போக வேண்டும் என்று அர்ணவ் சாபம் விட்டார்.
இது தொடர்பாக எங்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருநாள் வீட்டில் கணவர் அர்ணவ் கீழே தள்ளியதால் நான் மயக்கமடைந்தேன். அதன் பிறகு எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனே தெரிந்தவர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். எனது கணவர் அர்ணவு படப்பிடிப்பு இல்லாத காலத்தில் நான் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கினார். நான் எனது கணவருடன் வாழ விரும்புகிறேன். ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டார். என்னுடையே வாட்ஸ் அப், செல்போன், இன்ஸ்டாகிராம் பக்கம் என அனைத்தையும் பிளாக் செய்து விட்டார். என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறினார்.