கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
கடந்த மே மாதம் வெளியான படம் ரங்கா. டி.எல்.வினோத் இயக்கிய இந்த படத்தில் சிபி சத்யராஜ், நிகிலா விமல், சதீஷ், ரேணுகா, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராம்ஜீவன் இசை அமைத்திருந்தார், அர்வி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மகிழ்ச்சியாக பொழுதுபோக்க மணாலிக்குச் செல்லும் புதுமணத் தம்பதி எதிர்கொள்ளும் பிரச்சினையை பற்றிய படம். சிபி சத்யராஜ், தனது குழந்தைப் பருவ காதலி அபிநயாவான நடிகை நிகிலா விமலை ரகசிய திருமணம் செய்துகொள்கிறார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் தேனிலவுக்காக மணாலிக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து படம் எடுப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அதன் மூலம் சிலர் பணம் சம்பாதிப்பதையும் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இவர்களை எதிர்த்து அவர்கள் இருவரும் எப்படி போராடி ஜெயித்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்த படம் நாளை (25ம் தேதி) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.