'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது 25 வருட இசை பயணத்தை வெளிநாடுகள் மற்றும் இந்தியா என இசைக் கச்சேரிகளை நடத்தி கொண்டாடி வருகிறார். சமீபத்தில் யுவன் 25 நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யுவன் சங்கர் ராஜாவை வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், கார்த்தி, ஜி.வி.பிரகாஷ், அமீர், செல்வராகவன், லிங்குசாமி, வசந்த், விஜய், பா.இரஞ்சித், பிரபு சாலமன், தியாகராஜன் குமாரராஜா, ஹரிஷ் கல்யாண், டி.இமான், சந்தோஷ் நாராயணன், தேவி ஸ்ரீ பிரசாத், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆண்ட்ரியா, தீ, அதிதி ஷங்கர், எஸ்.பி.பி,சரண், ஏ.ஆர்.அமீன், சினேகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி நாளை காலை 10 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.