தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
ஆர்ஜே வைஷ்ணவி சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமானார். அஞ்சான் என்பவரை காதலித்து வந்த வைஷ்ணவி, கடந்த 2019ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், வைஷ்ணவி அஞ்சானை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆறு வருடமாக அஞ்சானுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, நாங்கள் இருவரும் இப்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன் ஆனாலும், உறவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் எங்களை நாங்களே இழக்காமல் இருக்க வேண்டுமென தீர ஆலோசனை செய்துவிட்டு அதன்பின்னர் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களுக்குள் பல பொதுவான மற்றும் பகிர்ந்துகொண்ட விருப்பங்கள் அனைத்தும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக இருப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டோம். எங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் இல்லை. தேவையில்லாமல் எதையும் யூகித்து பரப்ப வேண்டாம்.' என அதில் தெரிவித்துள்ளார்.