2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
சென்னை : ஜீ தமிழ் எப்போதும் தனது பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதோடு சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் போட்டியாளர்களின் திறமையை வெளிப்படுத்த பொருத்தமான தளங்களை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஜூலை 30ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. சாமானிய மக்களில் இருந்து 12 பேர் பல்வேறு சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 12 சின்னத்திரை/திரையுலக பிரபலங்களுடன் அவர்கள் இணைந்து நடனமாட உள்ளனர்.
இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 12 சாமானிய போட்டியாளர்களும் எதிர்காலத்தில் ஒரு ஸ்டாராக திரையுலகில் ஜொலிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடும் போட்டியாளர்களின் திறமையை மதிப்பிட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சினேகா மற்றும் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க ஆர்ஜே விஜய் மற்றும் கிகி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். கிளாசிக்கல், ஹிப்-ஹாப், ப்ரீஸ்டைல் முதல் நாட்டுப்புற நடனம் என ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ரவுண்டுகளின் மூலம் போட்டியாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர்.
வரும் ஜூலை 30 முதல் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் இரவு 8 மணிக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.