கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி | பிளாஷ்பேக் : சரஸ்வதி சபதத்தின் இன்னொரு வெர்ஷன் | ஆபாச வீடியோ, அவதூறு பரப்பிய 73 பேர் அனுசுயா புகார் | தமிழுக்கு வரும் தெலுங்கு இளம் ஹீரோ | காதலரை மணந்தார் ‛பிக்பாஸ்' ஜூலி | பிரித்விராஜூக்கு வில்லனாக மலையாளத்தில் நுழைந்த கத்தி பட வில்லன் | ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் இதுதான் : விஜய்சேதுபதி |

விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் நடிகராக நுழைந்தவர் புலி ராகவேந்திரன். ஆனால், அவருக்கு திரைத்துறையில் சரிவர வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அவர் சம்பள பிரச்னை, அரசியல் செய்கிறார்கள் என சில காரணங்களை சொல்லி நடிப்பையே மொத்தமாக தலை முழுகுவதாக கூறி விலகினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியிலும் தான் சந்தித்த தோல்விகள் குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் 'ஒரு தலை காதலால் உடம்பு போச்சு' என கையில் ட்ரிப்ஸ் ஏறும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அதில் சில பதிவுகளில் காதல் தோல்வியால் புலி ராகவேந்திரன் தற்கொலை முயற்சி என்ற தவறான செய்தியும் பரவியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் புலி ராகவேந்திரன் புது வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், மன அழுத்தத்தால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், நான் தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. அந்த போஸ்ட்டையே நான் நண்பர்களுடன் ஜாலியாக பகிர்ந்து கொண்டது தான். எனவே, தவறான செய்திகளை பரப்பாதீர்கள்' என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்க்கும் சில நெட்டீசன்கள் 'என்னது, ப்ரண்ட்ஸூக்காக ஜாலியா போஸ்ட் பண்ணியா? எதுல விளையாடனும் ஜாலியாக இருக்கனும்னு ஒரு விவஸ்தை வேண்டாமா?' என கடுப்பாகி திட்டி வருகின்றனர்.