சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் டிவி பிரபலமான சிவாங்கி சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவார். பலரது கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் 'செலிபரட்டி வாழ்க்கை எல்லாம் ஜாலி. கம்பெனில இண்டர்வியூ அட்டண்ட் பண்ணி வேலை கிடைக்குமா? இல்லையான்னு டென்ஷன் இல்லாத லைப் கிடைச்சிருக்கு சூப்பர். நடுத்தர குடும்பத்து மக்கள் தான் சிக்கி தவிக்கிறாங்க' என கமெண்ட் அடித்துள்ளார். அவருக்கு பதில் அளித்துள்ள சிவாங்கி, 'உங்க சூழ்நிலை புரியுது. ஆனா, எங்களுக்கு நாங்க பன்ற வேலை உங்களுக்கு புடிக்குமா புடிக்காதான்னு டென்ஷன் இருக்கும். உங்களுக்கு பிடிச்சாதான் எங்களுக்கு இங்க வேலை. அதனால எந்த வேலையும், யார் வாழ்க்கையும் ஈஸி கிடையாது. ஏழை, நடுத்தரம், பணக்காரன் அப்படின்னுல்லாம் இல்ல. எல்லாரும் அவங்க வாழ்க்கைல போராட்டத்த சந்திச்சிட்டு தான் இருக்காங்க' என கூறியுள்ளார். சிவாங்கி முன்னதாக இது போன்ற பல சூழல்களில் ரசிகர்களின் கமெண்ட்களுக்கு மிகவும் தெளிவாக கூலாக பதில் சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.