சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அரண்மனைக்கிளி' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான மோனிஷா, தற்போது கலர்ஸ் தமிழில் புதிதாக உருவாகி வரும் 'பச்சக்கிளி' தொடரில் நடித்து வருகிறார். ஜூலை 4 முதல் ஒளிபரப்பாகவுள்ள அந்த தொடரின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹீரோயினாக நடிக்கும் மோனிஷா சூட்டிங் ஸ்பாட்டில் செய்துள்ள குறும்புத்தனமான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரெட்டை ஜடையுடன் பள்ளி சீருடையில் சிறுமி க்யூட்டாக இருக்கும் மோனிஷா குளத்துக்கு அருகில் ஒரு சிறிய மீன் குஞ்சை கைகளில் பிடித்து விளையாடி மீண்டும் தண்ணீருக்குள் விடுகிறார். அது இறந்துவிட்டதா? என்று மோனிஷா ஆராய்ச்சி செய்யும் வேளையில் மீன்குஞ்சு துள்ளிக்குதித்து மீண்டும் தண்ணீருக்குள் விழுகிறது. இந்த வீடியோவை தனது இண்ஸ்டாகிராமில் மோனிஷா பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் 'சின்ன பொண்ணு மாதிரி விளையாட்டு பண்ணியாச்சு' என மோனிஷாவின் க்யூட்னஸை கமெண்ட் அடித்து வருகின்றனர்.