ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி கலைஞராக நுழைந்தவர் ராமர். அதன் பின் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் காமெடியில் அசத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஸ்பூப் செய்தபோது இவர் பேசிய 'என்னம்மா இப்படி பன்றீங்களே மா' டயலாக் வேற லெவலில் ரீச்சானது. இதனையடுத்து இவரை என்னம்மா ராமர் என்றே பலரும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ராமருக்கு கிருஷ்ணவேனி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரின் சொந்த ஊர் மதுரை பக்கத்தில் இருக்கும் மேலூர். இதைத்தவிர ராமர் பற்றிய வேறு எந்த தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது. இந்நிலையில், ராமர் ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை எம்.பி வெங்கடேசன், ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.