என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் |

பாரதி கண்ணம்மா சீரியலில் பல காலங்களாக வில்லியாக மிரட்டி கொண்டிருந்தது வெண்பா கதாபாத்திரம். ஆனால், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் வெண்பாவின் அம்மா, அவரை காமெடி பீஸாக மாற்றிவிட்டார். தற்போது பாரதி கண்ணம்மாவில் வெண்பாவின் கல்யாணம் தான் மெயின் ட்ராக்காக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வெண்பாவிற்கு ஜோடியாக மாப்பிள்ளை கதாபாத்திரம் புதிதாக என்ட்ரி கொடுக்கிறது. இதன் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக பிரபல நடிகர் சபரி என்ட்ரி கொடுக்கிறார். இவர் விஜய் டிவியின் வேலைக்காரன் தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பாரதி கண்ணம்மாவில் முதன் முதலில் ஹீரோ பாரதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவரும் சபரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.