நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
ஹிட் தொடரான சுந்தரி சீரியலின் முதல் சீசன் அண்மையில் நிறைவுற்று இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனின் முடிவில் ஹீரோ ஜின்ஸு மேனன் தற்கொலை செய்வது போலவும், இரண்டாவது நாயகி ஸ்ரீகோபிகா நீலநாத்தும் வீட்டை விட்டு வெளியேறுவது போலவும் முடிக்கப்பட்டது. எனவே, இரண்டாவது சீசனில் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்து வந்த நிலையில் தற்போது ஹீரோவாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா என்ட்ரி கொடுத்துள்ளார். தெய்வமகள், தாலாட்டு ஆகிய சீரியல்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள கிருஷ்ணா, சுந்தரி 2வில் வெற்றி வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், தாலாட்டு தொடரில் அப்பா - மகன் ரோலில் நடித்த கிருஷ்ணா - சர்வேஷ் ராகவின் காம்போ இந்த தொடரிலும் தொடர்கிறது. இந்த சீசன் 2 வில் சுந்தரி மற்றும் வெற்றியின் காம்போ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.