'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
சின்னத்திரை இயக்குநர் பிரவீன் பென்னட் விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் 'பாரதி கண்ணம்மா' தொடர் பல நாட்கள் டிஆர்பியில் நம்பர் 1 ஆக இருந்து வந்தது. தொடரின் நாயகி ரோஷினி ஹரிப்ரியன், வில்லி வெண்பா மற்றும் கண்மணி ஆகியோர் சீரியலை விட்டு அடுத்தடுத்து வெளியேறினர். இதன்காரணமாக மொத்தமாக சறுக்கிய பாரதி கண்ணம்மா தொடர் ஒருவழியாக தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பான க்ளைமாக்ஸில் பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, கவிஞர் சினேகன் அவரது மனைவி கன்னிகா மற்றும் பிக்பாஸ் புகழ் ஷிவின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 2 குறித்த அப்டேட்டை இயக்குநர் பிரவீன் பென்னட் வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாவில் ஹீரோ, ஹீரோயின் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை ப்ளர் செய்து, அதில் யார் இவர்கள்? என ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சீசன் 2 நடிகர்கள் யார்? கதைக்களம் என்ன? என ரசிகர்கள் ஆர்வமாய் கேட்டு வருகின்றனர்.