நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
'பூவே உனக்காக' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. அண்மையில் ராதிகா ப்ரீத்தி திடீரென தொடரை விட்டு விலகினார். கன்னடத்து பைங்கிளியாக இருந்தாலும் சில நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்ட இந்த தேவதையை தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விடாமல் துரத்தி வருகின்றனர்.
ராதிகாவும் சீரியலை விட்டு விலகிய பின் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி தாறுமாறாக போஸ் கொடுத்து அப்டேட் செய்து வருகிறார். தற்போது பிங்க் நிற புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை அகல திறந்து பார்க்க வைத்துள்ளது. ரசிகர்களும் ராதிகாவின் அழகை பார்த்து 'ரோஜா பூவுக்கே டப் கொடுக்கும் பேரழகு' என வர்ணிப்பதோடு, 'சீரியல் வேண்டாம்! சினிமாவுல நடிங்க' என அட்வைஸ் செய்து வருகின்றனர்.