‛பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் | தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி | ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் | செப்டம்பர் 9ல் வெளியாகும் அமலாவின் கணம் | நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி | ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது | மும்பையில் ஜோதிகா, சூர்யா : வைரலாகும் புகைப்படங்கள் | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் | சென்னைக்கு வரும் 'லைகர்' படக்குழு | ராஷ்மிகாவின் மூன்று முக்கிய ஆசைகள் |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத், பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அனிதா சம்பத், ‛வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு. இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும், நிறைய உழைப்பும், நிறைய மெனக்கெடல்களும் கடந்து சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.' என பதிவிட்டுள்ளார்.