புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? |
‛டிக் டாக்' மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் நீண்டநாள் கனவு இப்போது நிறைவேறி உள்ளது. அதாவது சொந்தமாக ஒரு வீட்டை கட்டி உள்ளார்.
வீட்டு கிரக பிரவேசம் மற்றும் குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து, ‛‛என்னுடைய சிறு வயதில் என் அப்பா அவரது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்டினார். அதேப்போல் எனக்கும் எனது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பது கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி உள்ளது. உங்கள் அனைவரது ஆசீர்வாதம் மற்றும் அன்பினால் தான் இது சாத்தியமானது. இதற்காக என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கட்டியுள்ள தனது இல்லத்திற்கு ‛மொழி இல்லம்' என பெயரிட்டுள்ளார் மிருணாளினி.