ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை | 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் எழுதி வைத்த 62 வயது ரசிகை |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதே ஆன நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. தெலுங்கு பிலிம் சேம்பர் அவரை சஸ்பெண்ட் செய்தது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். ஆனால் அவர் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜானியின் மனைவி இவ்விவகாரம் குறித்து அதிரடியாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜானியின் மனைவி சுமலதா என்ற ஆயிஷா அளித்த பேட்டி: ஜானி மீது பாலியல் புகார் கொடுத்த பெண், சிறுமியாக இருந்தபோது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடினார். அப்போது சினிமா துறையால் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டார். பிறகு ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குநராக வேலை பார்த்துவந்தார். ஐதராபாத்தில் இருக்கும் திரைப்பட அசோசேஷியனில் உறுப்பினராக சேர்வதற்குகூட பணம் கட்ட முடியாமல் இருந்தார். அப்போது ஜானிதான் அந்தப் பெண்ணுக்கு பண உதவி செய்தார்.
தான் சிறந்த நடன அமைப்பாளராக வர வேண்டும் அல்லது ஹீரோயினாக வேண்டும் என்று அப்பெண் ஆசைப்பட்டார். இதனால் ஜானி தான் பணியாற்றும் படங்களில் அந்தப் பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கினார். இப்போது அவர் மீதே அந்தப் பெண் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். மைனராக அந்தப் பெண் இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரம் இருக்கிறதா?
அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதை நேரில் யாராவது பார்த்திருக்கிறார்களா? அப்போதே ஏன் அந்தப் பெண் வெளியே சொல்லவில்லை? பாலியல் தொல்லைக்கு உள்ளானால் அப்பெண் ஏன் ஜானியிடம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்? அதுமட்டுமின்றி ஜானி மாஸ்டரிடம் பணியாற்றுவது அதிர்ஷ்டம் என்று ஏன் கூறினார்? புகார் அளித்த பெண் என் கணவரால் துன்புறுத்தலுக்கு உள்ளானதை நிரூபித்தால், நான் உடனடியாக அவரை விட்டு விலகவும் தயாராக உள்ளேன். இவ்வாறு சவால் விடுக்கும் வகையில் ஜானியின் மனைவி கூறியுள்ளார்.