பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? |

யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாசலம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் ‛அசுரன்' படத்தில் தனுஷூக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன் பிறகு ‛பத்து தல' படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவுள்ள படம் 'ப்ரீ லவ்'. இதில் டிஜே அருணாசலத்திற்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடிக்கின்றார். இப்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.