இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
டிக்டாக்கில் டப்மாஸ் செய்து புகழ்பெற்றவர் மிருனாளினி ரவி. அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்தது. கொண்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள எனிமி, எம்.ஜி.ஆர் மகன் படங்கள் தீபாவளிக்கு வெளியானது.
தற்போது அவர் கைவசம், கோப்ரா, ஜாங்கோ படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛சினிமா பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதால், அனைத்து மொழிப்படங்களுக்கும் தகுந்த பெண்களையே நாயகியாக நடிக்க வைக்கின்றனர். அதனால், தமிழ் பெண்களை, சினிமாவில் யாரும் புறக்கணிப்பதில்லை. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் பாலிசி' என நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.