ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'அண்ணாத்த', விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடித்த 'எனிமி' ஆகிய இரண்டு படங்களும் தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கில் தென்னிந்தியா முழுவதும் வெளியானது.
தமிழ்நாட்டில் 'அண்ணாத்த' படத்தின் வசூல் கடந்த 4 நாட்களில் 100 கோடியைக் கடந்திருக்கும் என்று கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'எனிமி' வசூலும் எதிர்பார்த்த அளவில் இருப்பதாகவே சொல்கிறார்கள்.
தெலுங்கில் 'அண்ணாத்த' படம் 'பெத்தன்னா' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெளியானது. ஆனால், படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள். இதே நிலைதான் 'எனிமி' படத்திற்கும் இருக்கிறதாம்.
முதல் மூன்று நாட்களில் 'அண்ணாத்த' படம் சுமார் 4 கோடியும், 'எனிமி' படம் சுமார் 3 கோடியும் வசூலித்துள்ளதாம். 'அண்ணாத்த' படம் பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அளவில் அந்தப் படத்தின் வசூல் அங்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.




