மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் பவானி என்ற கதாபாத்திரத்தில் பரீனா நடித்து வந்தார். அவரது கேரக்டர் சமீப காலங்களில் அதிக முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில் பரீனாவும் சூப்பராக பெர்பார்மென்ஸ் செய்து வந்தார். இந்நிலையில், இந்த தொடரிலிருந்து பரீனா திடீரென விலகிவிட்டார். அவர் விலகியதற்கு காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் அவர் நடித்து வந்த பவானி கதாபாத்திரத்தில் கீர்த்தி என்ற நடிகை நடிக்க ஆரம்பித்துள்ளார். கீர்த்தி முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை, ப்ரியமானவள், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரலேகா, மாங்கல்ய சந்தோஷம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.